GuidePedia

1
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கிய பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு நடிப்பதற்கும் பல வாய்ப்புகள் கதவை தட்டியுள்ளன.

தமிழில், திகார், மாஸ், சூதாடி ஆகிய படங்களை கைவசம் வைத்திருப்பவர், மலையாளம், கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
veittana-vedangalil-parthiban

இதில், பேரரசு இயக்கியுள்ள திகார் படத்தில் ஒரு தாதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முதலில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் என்பவரை வைத்து மலையாளத்தில்தான் திகார் படத்தை ஆரம்பித்தார் பேரரசு.

அதையடுத்து, மலையாள நடிகர் நடித்த படத்தை தமிழில் டப் செய்தால் பெரிய அளவில் எடுபடாது என்பதால், பார்த்திபனை உள்ளே இழுத்து, இரண்டு ஹீரோ கதையாக மாற்றியிருக்கிறார்.

அந்த வகையில், திகார் படத்தில் பார்த்திபன்-உன்னி முகுந்தன் இரண்டு பேருமே தாதாக்களாகத்தான் நடித்திருக்கிறார்களாம். அதிலும், பார்த்திபனின் நையாண்டிக்கு ஏற்ற வேடம் என்பதால், அவருக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் பேரரசு.

ஆக, சூர்யாவுடன் மாஸ் படத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் பார்த்திபனுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் சூதாடியிலும் வெயிட் வேடம்தானாம்.

ஆக, திரையில் இனி தோன்ற மாட்டேன். திரைக்குப்பின்னால் இருந்து டைரக்டராக மட்டுமே செயல்படப்போகிறேன் என்று பார்த்திபன் சொன்னதில் இருந்து இப்போது அவருக்கு திரையில் தோன்றும் மெகா வாய்ப்புகளாக கிடைத்து வருகின்றன.

அதனால் அடுத்த பட வேலைகளைகூட கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கூடுதல் முனைப்பு காட்டி வருகிறார் பார்த்திபன்.

Post a Comment




  1. click here It is very easy to for you to contact with us. We open 24/7 to make your appointment and help you all the way. We have extremely impressive escorts are available for dinner, date and party so don't be nervous about communicate with us when mood hits you.Best Escort Services in Shimla with hot body. Book Call Girls tonight in Shimla. Book Hotel and call us. Private hot girl massage in Shimlashimla escort services

    ReplyDelete

 
Top