அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'களம்' படத்தை புதுமுக இயக்குநர் ராபர்ட்.S. ராஜ் இயக்கி உள்ளார்.சூபீஷ் K சந்திரன் கதை,திரைக்கதை மற்றும் வசனம் எழுத,'ஆந்திர மெஸ்' என்ற படத்தின் மூலம் ஒளிபதிவாளராக அறிமுகமாகும் முகேஷ் ஒளிப்பதிவு செய்ய ,இசையமைத்துள்ளார் பிரகாஷ் நிக்கி.
ஒரு வீட்டை மையமாகக் கொண்ட இப்படத்தின் போக்கை ஆறு முக்கிய கதா பாத்திரங்களாக 'வெண்ணிலா கபடி குழு' ஸ்ரீநிவாசன் , 'சுட்ட கதை' நாயகி லக்ஷ்மி பிரியா, 'கோலி சோடா' மதுசூதனன், SS Music பூஜா, ஹம்ஜத் மற்றும் கனி நடித்துள்ளனர். இயக்குநர் ராபர்ட் இப்படத்தின் கதை பற்றி கூறியதாவது, "இப்படம் வழக்கமான திரைக்கதையிலிருந்து வித்தியாசமாக இருக்கும்.
இக்கதை எந்த வகையானது என்று கணிப்பது கஷ்டம். இப்படத்தின் கதை கரு தான் இப்படத்தை இயக்க தூண்டியது. இது நல்லத் தரமானப் படமாக அமைய இரவு பகலென உழைத்திருக்கிறாோம். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும்", என்று கூறினார். இவர் 'நான்' புகழ் ஜீவா சங்கரின் இணை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூபீஷ் K சந்திரன் இக்கதையை பற்றி குறிப்பிடும்பொழுது " இக்கதை முழுக்க முழுக்க பார்வையாளர்களின் நிலையில் இருந்து எழுதப்பட்ட கதை. எளிதில் புரியக்கூடியதாகவும் , நிறைய ஆச்சரியமூட்டும் விஷயங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது", என்றார்.
" ஒரு வீட்டுக்குள்ளே பல வித்தியாசமான கோணங்கள் காட்டப்பட வேண்டியதாயிற்று, அது பெரும் சவாலாக அமைந்தது. இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்" எனக் கூறினார் ஒளிப்பதிவாளர்முகேஷ்.
கலை இயக்குநர் செந்தில் ராகவன் கூறுகையில்"இக்கதையில் வரும் வீட்டை பழமையானதாகவும்,புதுபொலிவுடனும் காட்ட வேண்டியிருந்தது, அதற்கு , அதிக உழைப்பும் தேவைபட்டது", என்றார்.
இப்படம் தங்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என நம்பிக்கையாக இருக்கின்றனர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீநிவாசன் , லக்ஷ்மி பிரியா ஆகியோர்.குறுகிய காலத்தில் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு தயாரிக்க பட்டு உள்ள இந்த ஜனவரி மாதம் திரைக்கு வரும் என உறுதிபடக் கூறினார் படப்பிடிப்புக் குழுவினர்.

Post a Comment