GuidePedia

0
கடந்த தீபாவளிககு வரும் என்ற எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விஜய்யின் கத்தியும், விஷாலின் பூஜையும் மடடுமே திரைக்கு வந்தன. ஆனால், அஜீத்தின் என்னை அறிந்தால், விக்ரமின் என பட்டியலில இருந்த மற்ற படங்களின் படப்பிடிபபுகள் முடியாததால் பின்வாங்கின. ஆனால் இப்போது அந்த படங்களில் அஜீத்தின் என்னை அறிந்தால் வருகிற பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகி விட்டது.
eye-ennai-arinthal

அதேபோல், தீபாவளிக்கு பூஜை படத்தை வெளியிட்ட விஷால், பொங்கலுக்கு ஆம்பள படத்தை வெளியிடப்போவதாகவும் முன்பே அறிவித்து படப்பிடிப்பை முடுக்கி விட்டிருக்கிறார். ஆனால் சொன்னபடி விஷால் நடநது கொள்வார் என்பதால், அவர் படமும் இந்த பொங்கல் தினத்தில் வெளியாகும் படப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

மேலும், போன தீபாவளிக்கு அஜீத் படத்தைப்போலவே பின்வாங்கிய விக்ரமின் ஐ இந்த பொங்கலுக்கு திரைக்கு வருவது கிட்டத்த்ட்ட உறுதியாகி விட்டது என்கிறார்கள். காரணம், படப்பிடிபபு எப்போதோ முடிந்து விட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

முக்கியமாக, இந்த படம் ஏ.ஆர்.ரகுமானினால்தான் தாமதமாகும் என்று கருதப்பட்டுவந்த நிலையில், இப்போது அவர், தனது ஹாலிவுட் பட வேலைகளை தள்ளி வைத்து விட்டு, ரஜினியின் லிங்கா, ஐ என இரண்டு படத்திற்கும் பின்னணி இசையமைப்பதில் தீவிரமடைந்திருக்கிறார்.

ஆக, யாரால் தாமதமாகும் என்ற கருதப்பட்டதோ அந்த ரகுமானே தற்போது பின்னணி இசைக்கோர்ப்பில் இறங்கி விட்டதால், ஐ படத்தை கட்டாயம் பொங்கலுககு எதிர்பார்க்கலாம் என்கிறர்கள்.

விளைவு, இந்த பொங்கல் கோதாவில் அஜீத், விக்ரம் இருவருக்குமிடையேதான் பலத்த போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

Post a Comment

 
Top