GuidePedia

0
விஜய்யை வைத்து அட்லீ இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார் நயன்தாரா. விஜய் – நயன்தாரா ஏற்கெனவே வில்லு படத்தில் ஜோடியாக நடித்தனர். அதற்கு முன் சிவகாசியில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடினார் நயன்தாரா.

vijay-nayantara


இப்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வராவிட்டாலும், செய்தியை அட்லீ தரப்பி உறுதியாக்கியுள்ளது.

இந்தப் படத்துக்கு நயன்தாரா நாயகி என்றதுமே அவருக்கும் விஜய்க்கும் ராசியில்லை என்று கூறி, அந்த இடத்தைக் கைப்பற்றும் முயற்சியில் முன்னணி நடிகைகள் சிலர் தீவிரமாகியுள்ளார்களாம்.

ஆக்ஷன் ப்ளஸ் ரொமாண்டிக் படமாக உருவாகும் இந்தப் படத்தை மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

கலைபுலி தாணு, தி நெக்ஸ்ட் பிக் ரிலீஸ் மற்றும் விஜய் டிவி மகேந்திரன் ஆகியோர் சேர்ந்து தயாரிக்க உள்ளனர். சிம்பு தேவன் படத்தை விஜய் முடித்ததும், 2015 மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

Post a Comment

 
Top