தமிழில் கோவில்பட்டி வீரலட்சுமி, கலாபக்காதலன், உளியின் ஓசை, உயர்திரு 420 உள்பட பல படங்களில் நடித்தவர் அக்சயா. இதில்
ஆர்யா-ரேணுகா மேனன் நடித்த கலாபக்காதலன் படத்தில் ஒரு அதிரடியான கதாநாயகியாக நடித்திருந்தார் அக்சயா.
அந்த படத்தில் அக்காள் கணவரான ஆர்யா மீது காதல் கொண்டு அவரையே சுற்றி சுற்றி வருவார் அக்சயா.
அதனால் அந்த படம் அவரது நடிப்பில் ஓரளவு பேசபபட்டது. இருப்பினும் எதிர்பார்த்தபடி பெரிய ஹீரோக்களின் படங்கள் அக்சயாவுக்கு கிடைக்கவில்லை. அதனால் சில சின்ன பட்ஜெட் படங்களில நடித்து வந்தவர் கடைசியாக, மன்மத ராஜ்ஜியம், பட்டிக்காட்டு மாப்பிள்ளை போன்ற சில கன்னட படங்களிலும் நடித்தார்.
ஆனால், அப்படி அவர் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகவில்லை.இதில் பட்டிக்காட்டு மாப்பிள்ளை படத்தை மட்டும் வெளியிடும் முயற்சிகள் நடக்கிறது. இந்த நிலையில், புதிய படங்களே இல்லாமல் ஓராண்டு வரை காத்திருந்த அக்சயாவுக்கு சினிமாவில் மீதிருந்த நம்பிக்கை போய் விட, கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்பிஏ படித்து வருகிறார்.
அதனால் அவரைத்தேடி எதாவது சினிமா வாய்ப்புகள் சென்றால், சினிமாவை நம்பி மோசம் போனது போதும். இனிமேலாவது விட்ட படிப்பை தொடர்ந்து என் வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன் ஆளை விடுங்கள் என்று சினிமாக்காரர்களை துரத்தி அடிக்கிறார் அக்சயா.

Post a Comment