GuidePedia

0
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இந்த பகுதியில் அடுத்தடுத்து வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தன. இதைத்தொடர்ந்து இந்த வாத்துக்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பால் தான் இந்த வாத்துகள் இறந்தது உறுதியானது.

இந்த மாவட்டத்தில் உள்ள சம்பகுளம், புறக்காடு, நெடுமுடி உள்பட பல பகுதிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
இதைத்தொடர்ந்து பறவை காய்ச்சல் பரவுதை தடுக்க கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.
keralavil-paravi-kaichal

முதல் கட்டமாக பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்திற்கு மேற்பட்ட வாத்துக்களை உடனடியாக கொல்ல முடிவு எடுக்கப்பட்டது. வாத்து வளர்ப்போருக்கு இதற்காக நஷ்டஈடு தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் வாத்துக்களை கொல்ல வாத்து வளர்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இன்று இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கேரள சுகாதார மந்திரி கூறியுள்ளார். மேலும் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வாத்துக்கறி மற்றும் முட்டைகளை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இறந்த வாத்துக்களை உடனடியாக எரித்து அழிக்கவும், பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோட்டயம் குமாரகத்தில் உள்ள கோழி பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கும் பறவை காய்ச்சல் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பறவைகள் சரணாலயம் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

திருவனந்தபுரம், திருச்சூர் போன்ற இடங்களில் செயல்படும் மிருக காட்சி சாலைகளில் விலங்குகளுக்கு கோழி இறைச்சி உணவு வழங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்றும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கேரள உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

Post a Comment

 
Top