GuidePedia

0
சில புரோகிராம்கள் கம்ப்யூட்டரை விட்டு போக அடம் பிடிக்கும். அன் இன்ஸ்டால் கொடுத்தால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, UnInstall ஆக மறுத்துவிடும்.

அதுபோன்ற புரோகிராம்களை நீக்க பயன்படுகிறது இந்த மென்பொருள்.


சுலபமாக அன்இன்ஸ்டால் செய்வதுமட்டுமல்லாமல் ரிஜிஸ்டரியிலும் அதனுடைய சப்போட்ரிங் பைல்களை நீக்கிட இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.

Download IObit Uninstaller for Free

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நமது கணிணியில் நிறுவியுள்ள அப்ளிகேஷன்கள் வரிசையாக கிடைக்கும். இதில் எந்த எந்த அப்ளிகேஷன்களை நாம் அன்இன்ஸ்டால் செய்திட விரும்புகின்றோமோ அதற்கு எதிரே உள்ள ரேடியோ பட்டன் மூலம் தேர்வு செய்யவும்.பின்னர் நடுவில் உள்ள பச்சை நிற பட்டனை கிளிக் செய்யவும்.உங்களுக்கான எச்ச்ரிக்கை செய்தி வரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

உங்களுக்கான அப்ளிகேஷன்கள் ஸ்கேன் ஆகும்.

இதில் ரிஜிஸ்டரில் உள்ள பைல்கள் நமக்கு தெரியவரும்.

அனைத்தையும் தேர்வு செய்து டெலிட் கொடுத்துவிடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அவ்வளவுதான். இனி அன்ஸ்டால் ஆகாது அடம்பிடித்த பைல்கள் அனைத்துமே டெலிட் ஆகிவிடும்.

Post a Comment

 
Top